மே 13, மூன்றாம் உலக போர் தொடங்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு?!

மே 13ம் தேதி மூன்றாம் உலக போர் தொடங்கும் என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் கணித்துள்ளார்.

தாம் கடவுளின் தூதர் என்று அறிவித்து கொண்டுள்ள clairvoyant என்ற பிரபல ஜோதிடர் 2015ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் சில ஆண்டுகளில் அமெரிக்க அதிபராக பதவியேற்பார் என்று கூறியிருந்தார்.

அப்போது ட்ரம்புக்கு இருந்த குறைந்த செல்வாக்கு காரணமாக யாரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஹிலாரியை வென்று ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

இந்நிலையில், தற்போது அந்த ஜோதிடர் மூன்றாம் உலகப்போர் மே 13ம் தேதி தொடங்கும் என்று கணித்துள்ளார். வடகொரியா அமெரிக்கா மீது அணு ஆயுதங்களை வீசப்போவதாக எச்சரித்துள்ள நிலையில், வடகொரியா மீது முதல் தாக்குதலை அமெரிக்க தொடுக்கலாம் என்ற அச்சம் பரவி வருகிறது.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே சிரியா குண்டுவீச்சு உள்ளிட்ட பிரச்சனைகளில் பலத்த முரண்பாடு வலுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஜோதிடரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Topics – Top News