தனுஷ் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை..!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனவும் தங்களின் அன்றாட மற்றும் மருத்துவ செலவுகளுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாயை தனுஷ் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன், மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. எனினும் சான்றிதழ்களில் குழப்பம் இருப்பதால் டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என கதிரேசன் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது.

Related Topics: Top news