அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி..! அம்மா அணியினர் குழு அமைப்பு..!

இரு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவை இணைக்கும் முயற்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உள்ளிட்ட அமைச்சர்கள்  ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையிலான அந்த குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அம்மா அணி சார்பில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளதால் விரைவில் இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Topics: Top news