தமிழர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும்! தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை! மொரிசியஸ் அரசு அதிரடி!

தமிழர்கள் தங்களது உரிமைகளுக்கு தாய் தமிழகத்தில் ஒரு பக்கம் போராடினாலும் நமக்கு தெரியாத பல நாடுகள் தமிழர்களுக்கு அளித்துள்ள முன்னுரிமைகளை தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

மொரிசீயஸ்

கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய மொரிசியஸ் நாட்டிற்கு 1972 களில் தமிழகத்தில் இருந்து  தொழிலாளர்களை பிரிட்டன் அரசு  பெருமளவு கொண்டு சென்றது.

இதனால் அங்கு தற்போது தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம்ஆகும். மொத்த மக்கள் தொகை 12 லட்சம். தமிழர்கள் சுமார் 10 சதவீதத்திற்குள் வசிக்கின்றனர்.

ஆனால் அந்த அரசு மக்கள் தங்கள் தாய்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என உத்தரவிட்டதால், நாடுமுழுவதும் சுமார் 100 தமிழ் பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் நம் தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை தான்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தார்.

வட மாநில விழாக்களுக்கு தமிழகத்தில் விடுமுறை விடும் போது, தமிழர்களின் விழாவான தைப்பூசத்திற்கு ஏன் விடுமுறை இல்லை என கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனால் இதனை நீதிபதிகள் பரிசீலிக்கவே இல்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மொரிசியஸ் தமிழர்கள் சுப்ரமணி, பொன்னுச்சாமி, முத்தையன் என சுத்த தமிழ் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு வைக்கின்றனர்.

அந்த நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, போஜ்பூரியைச் தாய்மொழியாக கொண்ட, அனிருத் ஜகுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.