ஜெ., பெயரில் புதிய கட்சி? தம்பிதுரைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செந்தில் பாலாஜி..!

கரூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்ட தடையாக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணி தனியாக பிரிந்தபோது சசிகலாவிற்கு ஆதரவு அளித்தவர் செந்தில் பாலாஜி.

தம்பிதுரையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியை ஒதுக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கரூரில் அமைக்க தடையாக இருப்பதாக அவர்கள் இருவர் மீதும் செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தி வரும் 24-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா பெயரில் புதிய கட்சியும் தொலைக்காட்சியும் தொடங்க செந்தில் பாலாஜி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Topics: Top news