ஜீவநதியை சுத்தப்படுத்த நிதிஷ்குமாரின் யோசனை..!

நாட்டின் ஜீவநதியாகக் கருதப்படும் கங்கையை சுத்தப்படுத்துவேன் என பிரதமர் மோடி சூளுரைத்தார். அதற்காக மத்திய அரசு சார்பில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டபோதிலும் கங்கை சுத்தமாகவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கங்கை நதி சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதன் நீரோட்டம் சீரானதாக இருக்க வேண்டும் எனவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத வரையில் கங்கை சுத்தமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

வண்டல் மண் படிவு உள்ளிட்டவைகளால் கங்கையின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தான் கங்கையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை தூர்வாரும் வரையில் கங்கை சுத்தமாக இருக்காது என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

நிதிஷ்குமாரின் யோசனையையும் கருத்தில்கொண்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்குமானால் கங்கை தூய்மையடையும்.

Related Topics: Top news