வாங்குன லஞ்சத்துக்கு ரொம்ப பொறுப்பா வேலை பார்க்கும் அதிகாரிகள்..!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். அதற்காக சிறைத்துறை டிஜிபி 2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். உண்மையை வெளிப்படுத்தியதால் தன்னை உயரதிகாரிகள் மிரட்டுவதாக ரூபா தெரிவித்தார். சிறையில் நடந்த விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார் ரூபா.

பெண்கள் சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 7 மற்றும் 8-ல் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன – டிஐஜி ரூபா ஆதாரங்கள் அளிக்கப்பட்டது தொடர்பாக புகாரை கர்நாடக தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார் டிஐஜி ரூபா.

Related Topics: Top news