கோகுலத்தில் நடந்த கோல்மால்..! இவ்ளோ வரி ஏய்ப்பா..? என்னாய்யா நடக்குது நாட்டில?


கோகுலம் சிட்பண்ட்,கோகுலம் பைனான்ஸ் என கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா என கோகுலம் கோபாலனின் முதலீடுகள் விரிவடைந்து கிடக்கிறது. இது தவிர துபாயில் நட்சத்திர ஓட்டல்.


3 நாட்களுக்குமுன்னர் கோகுலம் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 13ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஓட்டல் கணக்குகளிலும் தெளிவில்லாத கணக்குகளே இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையிலும் கணக்கில்லாமல் நன்கொடைகள் பெறப்பட்டதும் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக பகீர் கிளப்புகிறார்கள் அதிகாரிகள்.

 


கேரளாவில் சொந்த ஊரில் தங்கியிருந்த கோபாலன் அவரது மகன் பிஜூ,அவரது மருமகன் பிரவீண் ஆகியோரை சென்னை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சாதாரண நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களை வருமான வரி கட்டுவதற்கு நெருக்கடி கொடுக்கும் வருமான வரித்துறை, 13ஆயிரம் கோடி  வரி ஏய்ப்பு செய்யும் வரை ஏன் கண்டுபிடிக்கவில்லை?

 


மேலும் இந்த கோகுலம் நிறுவனம் ஆயிரம்,ஐநூறு நோட்டுகள் செல்லாது என அறிவித்த போது பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மாற்றுவதற்கும் உடந்தையாக இருந்ததும் இந்த ரெய்டில் தெரிய வந்துள்ளது.

Related Topics :National News