மதுவுக்கு அடிமையாகி கிடந்த ஊர் இன்று ‘செஸ்’ விளையாட்டில் ‘கில்லி’..! இந்தியாவில் தாங்க இந்த அதிசயம்..!

மதுவுக்கு அடிமையாகி கிடந்த ஒரு ஊர் குடிமகன்கள் இன்று செஸ் விளயாட்டில் கில்லிகளாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், மரோட்டிச்சால் கிராம குடிமகன்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். 1970களில் கேரளாவிலும் கல்வி கற்காதவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நல்ல குடி காரர்கள்.


குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபடுவது, கொலை,கொள்ளைகளில் ஈடுபடுவது ஊருக்குள் சச்சரவுகளில் ஈடுபடுவது என குடிகாரர்களின் இம்சை தாங்க முடியாத அளவுக்கு இருந்தது.


அந்த மரோட்டிச்சால் கிராமத்தில் உண்ணிகிருஷ்ணன்(59) என்பவர் டீ கடை வைத்துள்ளார். காலையில் டீ குடிக்க வந்து உட்காரும் குடிகாரர்கள் டீ குடித்து விட்டு சென்றால் அதன் பின்னர் மதுதான். குடிக்க ஆரம்பித்தால் பின்னர் டீ கடை முன்பு வந்து அடிதடி,வம்பு என அதகளம் ஆகும்.
உண்ணிகிருஷ்ணன் 10ம் வகுப்பில் இருந்தபோது செஸ் விளையாட ஆரம்பித்தார். அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்க தொடங்கினார்.

இந்த செஸ் விளையாட்டில் மனம் ஈடுபடும்போது பிற சிந்தனைகளில் மனம் ஈடுபடுவதில்லை. மன ஒருங்கிணைவு, ஞாபகசக்தி, பதற்றமற்ற நிலை என்பன போன்ற நல்ல மாற்றங்கள் கிடைத்தது. இதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். இதில் பலர் குடியை மறந்தனர். குடியை மறந்து செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டினர்.


உண்ணிகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்டோருக்கு செஸ் கற்றுக்கொடுத்துள்ளார். இன்று 10 வயது முதல் 50 வயது உடையவர் வரை செஸ் பிளேயர்ஸ். செஸ் விளையாட்டில் கில்லாடிகள் என்றே சொல்ல வேண்டும்.


அந்த காலத்தில் கிராமங்களில் ஆடு,புலியாட்டம்,பல்லாங்குழி போன்றவை விளையாடியது போல மரோட்டிச்சால் கிராமமே செஸ் விளையாட்டில் மூழ்கி கிடக்கிறது. இதில் விந்தையான விஷயம் தற்போது மரோட்டிச்சால் கிராமத்தில் குடிகாரர்களே இல்லை.


செஸ் விளையாடும் கிராம மக்கள் குறித்து கேள்விப்பட்ட அமெரிக்காவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பாபி பிஸ்ச்சர் இந்த கிராமத்துக்கு வந்து செஸ் விளையாடுவதில் மேலும் சில நுட்பங்களை கற்றுக்கொடுத்துச் சென்றாராம். அவ்வளவு பெருமைக்குரிய ஊராக மரோட்டிச்சால் திகழ்கிறது.
ஒரு ஊரின் குடியையே மாற்றிய ‘செஸ்’ பெருமைக்குரியதே..என்று கேரளாவே செஸ்சை கொண்டாடுகிறார்கள். இன்று கேரளாவின் சமூக விளையாட்டாகவே செஸ் மாறிவிட்டது.
‘செஸ்’ 6ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய விளையாட்டாகும்.

Related Topics: National News