தலைமைச்செயலகம் என்ன சந்தை மடமா?.. உடனே வெளியே போங்க… அமைச்சர்கள் மீது உச்சபட்ச கோவத்தில் மக்கள்..!

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை தமிழகத்தின் தலைமைச் செயலமாக பல்லாண்டு காலமாக இருந்து வருகிறது.

தமிழக அரசு நிர்வாகத்தின் அடையாளமாகத் திகழும் தலைமைச் செயலகம் கடந்த சில மாதங்களாக அதிமுக கட்சி அலுவலகம் போன்று மாறியுள்ளது.

மக்கள் பணிகளை செய்ய வேண்டிய இடத்தில் அமைச்சர்களும் முதலமைச்சரும் அக்கட்சியின் நிர்வாகிகளும் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே தலைமைச் செயலகம் அதிமுகவின் தலைமைக் கழகம் போல் செயல்பட்டு வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் நலனில் சற்றும் அக்கறை கொள்ளாத அரசு தற்போதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கிடையாது, ஆளும் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-க்களும் ரெசாட்டில் கூத்தடிப்பது, கப்பலில் கூத்தடிப்பது என சந்தோஷமாய் சுற்றித் திரிகின்றனர். அமைச்சர்களுக்கு கட்சியைக் காப்பது தொடர்பாக விவாதம் நடத்துவதற்கே ஒரு நாளில் உள்ள 24 மணி நேரம் போதவில்லை.

கட்சி பிரச்னைகள் குறித்த அனைத்து விவாதங்களும் தலைமைச் செயலகத்தில் தான் நடக்கிறது.

நீங்க என்ன கூத்து வேணா அடிங்க.. எத பத்தி வேணும்னாலும் பேசுங்க.. ஆனா உங்க கட்சி அலுவலகத்துலயோ இல்ல உங்க வீடுகளிலயோ நடத்துங்க.. அத விட்டுட்டு தலைமைச் செயலகத்தில் ஏன் உங்க கட்சி விஷயத்த பத்தி பேசுறீங்க என கொந்தளிக்கிறார்கள் மக்கள்..

மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிலோ அல்லது அதிகாரிகளிடத்திலோ மனு அளிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்குள் நுழைய பொதுமக்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு உங்கள் கட்சி விவகாரங்களைப் பற்றி சாவகாசமாக தலைமைச் செயலகத்திற்குள் பேசுறீங்க என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Related Topics: Top news