வெள்ளைக்காரா வெளியே போ! தருண் விஜய்க்கு எதிராக கருப்புத் தமிழர்கள் போராட்டம்! 

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் எம்.பியும். பா.ஜ.க. முன்னணி தலைவர்களில் ஒருவருமான தருண் விஜய் வந்திருந்தார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளையனே வெளியே போ என முழக்கம் எழுப்பினர்.

இதனால் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர். பலரை கைது செய்தனர்.

தமிழர்கள் உள்ளிட்ட தென் இந்தியர்கள் கருப்பர்கள், நாங்கள் அவர்களுடன் இணைந்து வாழ்ந்து எங்கள் சகிப்புத்தன்மையை காட்டி வருகிறோம் என  அண்மையில் தருண் விஜய் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Topics : online tamil news