தந்தையின் காமவெறி..! சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை..! கருக்கலைப்புக்கு அனுமதி!!

இந்த உலகம் எவ்வளவுதான் நவீன காலக்கட்டத்திற்கு நகர்ந்தாலும், தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்தினாலும் நாட்டில் குற்றச்சம்பவங்களை தடுப்பது என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. அதுவும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் நடப்பது ஏராளம் என்றே சொல்லலாம்.

அவ்வாறு, தன் தந்தையின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட 10 வயது சிறுமி தற்போது கருக்கலைப்பு வரை வந்துள்ள அதிர்ச்சிக்குரிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம், ரோதக்கை சேர்ந்த சிறுமி, கடந்த 5 மாதங்களுக்கு முன் தனது தாய் வேலைக்கு சென்றிருந்தபோது, வளர்ப்புத் தந்தையால் பல முறை பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டு, காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகிறார்.

பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமியின் வயிற்றில் 20 வார கரு உருவானது. சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவிற்கு பரிந்துரை செய்தது. இதன்படி மருத்துவர்கள் குழு கூடி பரிசீலித்து அனுமதி வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இளம்பெண்களே கருக்கலைப்புக்கு பயப்படும் தற்போதைய சூழ்நிலையில், இந்த சிறு வயதிலேயே கருக்கலைப்புக்கு தயாராவது நரக வேதனையை அளிக்கும் சம்பவமாக கருதப்படுகிறது.

ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் பட்சத்தை தவிர, 20 வாரத்தை தாண்டிய கருவை கலைக்கமுடியாது என இந்திய சட்டம் தெரிவிக்கிறது.

Related Topics: Online Tamil News