தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ரூ.500.! ஆர்கே நகர் பெண்கள் கொடுத்த சரியான பதிலடி.!!!

தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ரூ.500.! ஆர்கே நகர் பெண்கள் கொடுத்த சரியான பதிலடி.!!!

சென்னை ஆர்.கே நகரில் ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார்.

தினகரனுக்கு ஆதரவாக, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி. என பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று, கட்சி, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை பண பட்டுவாடா செய்தது.

இதுதொடர்பாக எழுந்த புகாரால் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

பின்னர் இந்நிலையில் 21ல், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இப்போது சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு ஆரத்தி எடுக்குமாறு பெண்களை சந்தித்து அவரது ஆட்கள் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த பெண்கள் மறுத்து உள்ளனர். இது குறித்து ஆர்கே.நகர் பகுதி மக்கள கூறியாதவது.

தினகரன் போட்டியிட்ட தொப்பி சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கூறி ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் கொடுத்துள்ளனர். தற்போது தேர்தல் ரத்தான் சில நாட்களில் பணம் கொடுத்தவர்கள் திரும்ப பணத்தை கேட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் நடக்க உள்ளதால் அவர் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். அதனால் அவருக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் 500 தருகிறோம் என தெரிவித்தனர்.

ஏற்கனவே, 4,000 ரூபாயை திரும்ப கேட்டதுபோல் ஆரத்தி எடுக்க தருவதாக கூறும் பணத்தையும் திரும்பி கேட்க வாய்ப்புள்ளது. இதனால் பணம் வேண்டாம் என அப்பகுதி மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Related Topics:Top News