ஸ்டாலின் போட்ட குறுக்குவழி கணக்கு ! காலை வாரும் ஆதரவு கட்சிகளால் விரக்தியில் மருது கணேஷ்..!!

ஸ்டாலின் போட்ட குறுக்குவழி கணக்கு ! காலை வாரும் ஆதரவு கட்சிகளால் விரக்தியில் மருது கணேஷ்..!!

சென்னை ஆர்.கே நகர் இடைதேர்தல் வருகிற 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி,காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

எனவே பெரும் பலத்துடன் இந்த தேர்தலில் திமுக களம் இறங்குகிறது. எடப்பாடி ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி ஆர்.கே நகர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கணக்கு போட்டிகிறார்.

இந்நிலையில் மருது கணேஷ் ஏற்கனவே தனது மருது கணேஷ்  தொடங்கிவிட்டார்.

ஆனால் பிரச்சாரத்தை தொடங்கும் போது அவருடன் ஆதரவு கட்சியின் நிர்வாகிகள் செல்லாமல் கழன்று விடுவதோடு திமுகவின் கட்சியின் கொடிகளை திமுக தொண்டர்களிடம் கொடுத்து விட்டு விடுகிறார்களாம்.

இதனால் திமுக வேட்பாளர் மருது கணேஷ் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சியும் கம்னியூஸ்ட் கட்சியிம் ஆர்கே நகர் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை வாங்கியுள்ளனர்.

எனவே அந்த கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு வந்தால் ஓட்டுகளை கைப்பற்ற முடியும் .

இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Related Topics:Top News