ஆயுதத்துடன் வந்த ஆசாமி … அலறி அடித்து ஓடிய நடிகர் சல்மான் கான் !!

ஆயுதத்துடன் வந்த ஆசாமி … அலறி அடித்து ஓடிய நடிகர் சல்மான் கான்

சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டலால் ரேஸ் 3 படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ரேஸ் 3 படப்பிடிப்பு மும்பையில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் படப்பிடிப்புத் தளத்திற்குள் தடாலடியாக நுழைந்தனர். அவர்கள் சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

முன்னதாக ஜோத்பூரில் உள்ள மான்களை வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த தாதா சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவரது ஆட்கள் ஆயுதங்களுடன் வந்து ஆட்டம் காட்டிவிட்டியுள்ளனர் என்று தெரிகிறது.

இதனால், ரேஸ் 3 படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இது பற்றி அறிந்த போலீசார் மும்பையில் சல்மான் கானின் வீட்டிற்கு பாதுகாப்பு போட்டிருக்கின்றனர். அவரை அடிக்கடி வெளியே தலைகாட்ட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.