கண்ணால் பெண்ணை மயக்கி இழுத்துச் செல்ல முடியும்?!

ஆண்கள் மற்றும் பெண்களை வசியம் செய்ய முடியும் என சில மந்திரவாதிகள் கூறி வருகின்றனர்.

இதனை பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். பலர் நம்புவதுமில்லை.

இதுபற்றிய ஒரு பதிவு காணக்கிடைத்தது. ஒரு வைத்தியர் தன்னால் இப்படி செய்ய முடியும் என எழுதியுள்ளார்.

அதாவது தங்களுக்கு பிடித்த பெண்ணை, திருமணம் செய்ய முடியாவிட்டால், இந்த முறையை பயன்படுத்தி அவரை மயக்கி விடலாம் என எழுதியுள்ளனர்.

பெண்களை மயக்க ஒரு தேவதை உள்ளதாம். அதன் பெயர் மோகினியாம். அதனை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஒரு பெண்ணை கண்ணாலேயே வசப்படுத்தி தான் விரும்பும் இடத்திற்கு கொண்டு வர முடியுமாம்.

இதே போல் தங்களுக்கு பிடித்த ஆணையும்  பெண் ஒருவர் இழுத்து வர முடியுமாம்.

இந்த கலை தெரிந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

அதே நேரம் இந்த கலை தெரியும் என ஏமாற்றுபவர்கள் நிறைய உள்ளனர். அவர்களிடம் நம்பி ஏமாறுவோரும் நிறைய உள்ளனர்.

அவர்களிடம் சிக்கி பணத்தை விரயம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

Related Topics : Online Tamil News