நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம் !!

நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம் 

நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் மீண்டும் ஏற்றுகொண்டதாக அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த இடைதேர்தலில் டி.டி.வி தினகரன் உள்பட பெரும் அரசியல் ஆளுமைகளுக்கு எதிராக நடிகர் விஷாலும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷாலை முன்மொழிந்த 10 பேரில் இரண்டு பேர் பின்வாங்கிவிட்டதாக கூறி நடிகர் விஷாலின் வேட்புமனுவை இன்று மாலை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

இதையடுத்து, தன்னை முன்மொழிந்த நபர்கள் மிரட்டப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாக தெரிவித்த நடிகர் விஷால், தனது வேட்புமனு மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இறுதியில் விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.