ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; போராடி மீட்டும் உயிரிழந்த பரிதாபம்!

மத்தியப்பிரதேச மாநிலம், செஹோர் பகுதியில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சத்யம் என்ற 5வயது சிறுவன் தவறி விழுந்தான். சிறுவனை மீட்கும் பணியில் இரவு முழுவதும் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.

ஜேசிபி உதவியுடன் அந்த ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டப்பட்டு இன்று அதிகாலை சிறுவனை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் சத்தயம் மிகவும் மோசமாக உடல்நிலையில்  காணப்பட்டதால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

Related Topics: Online Tamil News