எடப்பாடிக்கு தெரியாமல் சசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள்.! அதிர்ச்சியடைந்த எடப்பாடி செய்த காரியம்..!!

எடப்பாடிக்கு தெரியாமல் சசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள்.! அதிர்ச்சியடைந்த எடப்பாடி செய்த காரியம்..!!

சிறையில் இருந்து  பரோலில் 5 நாள் வந்துள்ள சசிகலாவை யாரும் சந்தித்து பேசக்கூடது அரசியல் சம்மந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள மூன்று அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

வேட்டி சட்டை அணியாமல் பேண்ட் சர்ட் அணிந்து சசிகலாவை அவர் விட்டின் பின் வாசல் வழியாக சென்று அவருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

உளவுத்துறை மூலம் இதை மோப்பம் பிடித்த எடப்பாடி அவர்களை அழைத்து பேசினாராம்.

அமைச்சராக இருக்கும் எங்களை எந்த அதிகாரிகளும் மதிப்பதில்லை. இதை பற்றி உங்களிடம் சொல்லியும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விரக்தியால்தான் சசிகலாவை சந்திக்க சென்றாதாக கூறினார்களாம். இதனையடுத்து அவர்களிடம் பேசி அவர்களின் கோரிக்கை சரி செய்யப்படும் .

அவர்கள் பக்கம் செல்ல வேண்டாம் என முதல்வர் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது.

Related Topics: Top News