சசிகலாவின் புதிய கோரிக்கை! ஏற்குமா சிறை நிர்வாகம்?

ஆங்கிலம் படிக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறு பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். ஆனால் சசிகலாவிற்கு தமிழ் மட்டும் தான் தெரியும்.

சிறு வயதில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சசிகலா படித்திருக்கிறார். இதனால் அவருக்கு ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரியும்.

ஆனால் சரளமாக பேசத் தெரியாது. சிறையில் இருந்து வெளியே வரும் போது, ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா.

இதனால் ஒரு ஆசிரியரை நியமிக்குமாறு கேட்டுள்ளார். இதனை சிறை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதா என தெரியவில்லை.

Related Topics : Online Tamil News