அவர் சொல்வதைதான் கேட்க வேண்டும் .! தினகரனுக்கு கட்டளையிட்ட சசிகலா.. !அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு..!!

அவர் சொல்வதைதான் கேட்க வேண்டும் .! தினகரனுக்கு கட்டளையிட்ட சசிகலா.. !அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு..!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா தனது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்கு 5 நாள் பரோலில் வந்திருந்தார்.

பரோலில் வந்த சசிகலா தனது குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்கே நேரம் சரியாக இருந்ததாக கூறப்படுகிறது.

சசிகலாவின் தம்பி திவாகரனும் ,தினகரனும் ஒருவரை ஒருவர் மாறி குற்றம் சாட்டிகொண்டனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தீர்த்துவைக்க முடியாததால் சசிகலா விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தினகரனை நேற்றுஇரவு சந்தித்த சசிகலா தினகரனிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.

அப்போது சிறை வாழ்க்கை என்பது கொடுமையான விஷயம். அதிலும் பெண்கள் சிறையில் இருப்பது அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய தண்டனை.

எனக்கு பரோல் முடிந்து சிறைக்கு செல்வது என்னுடைய நெஞ்சு பகீர் என்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியை உன்னிடம் கொடுத்து நடத்த சொன்னால் சரியாக வராது.

எனக்கு கட்சிதான் முக்கியம் இக்கட்டான சூழ்நிலையில் சரியான ஆலோசனை சொல்லும் நபர் யார் என்றால் அவர் என் கணவர் நடராஜன் மட்டும் தான்.

அதனால் அவர் உஅடல் நலம் பெற்ரு வந்த பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துகொள்ளலாம் .

தினகரனிடம் பொறுமையாக இருக்கும்படி சசிகலா உருக்கமாக பேசியுள்ளார். ஆனால் அதனை ஏற்க தினகரன் தரப்பு மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Topics:Top News