60 போலி நிறுவனம் மூலம் ரூ.1430 கோடி வரி ஏய்ப்பு.!! சசிகலா குடும்பத்தின் ஆட்டம் அம்பலமானது.!!

60 போலி நிறுவனம் மூலம் ரூ.1430 கோடி வரி ஏய்ப்பு.!! சசிகலா குடும்பத்தின் ஆட்டம் அம்பலமானது.!!

சசிகலா குடும்பம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக வாருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் வருமான வரிதுறையினர் கைப்பற்றினர்.

ஆவணங்களை ஆய்வு செய்ததில் சசிகலா குடும்பம் ரூ.1430 கோடிக்கு வருமானத்திற்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சொத்துக்கள் அனைத்தும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யபட்டுள்ளது.

அந்த சொத்துக்கள் தமிழகம் முழுவதும் 200 இடங்களில் வாங்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், சசிகலா குடும்பத்தினர் 60 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததும் அதில் பலர் பங்குதாரர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேரிடையாகவும் மறைமுகமாகவும் 355 பேருக்கு இதில் தொடர்புள்ளது. எனவே அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் எனத்தெரிகிறது.

முக்கியமாக பல போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் விவேக் மற்றும் அவரின் சகோதரி கிருஷ்ணபிரியா பெயர்களில் வாங்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களிடம் அதிகபட்ச விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Topics:Top News