வட போச்சே கதையானது பன்னீர்செல்வம் கதை..! பாஜ கை கழுவல்..! எதிர்கால அரசியல் நழுவல்..!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த வரை அவரை பிரதமர் மோடி அரவணைத்து வைத்திருந்தார். பின்னர் முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்ததும் பன்னீர்செல்வத்தின் மீதான பார்வை மறைவுப்பிரதேசமானது.
பிரதமர் மோடியை பொறுத்தவரை மன்னார் குடி தரப்பை அதிமுகவில் இருந்து விரட்டுவது தான் முக்கிய குறிக்கோள். அதற்கு யார் அரசியல் ரீதியாக ஆதரவு தரமுடியுமோ அவர்களை மட்டுமே ஆதரித்து வருகிறார் என்பதற்கு பன்னீர்செல்வம் நல்ல உதாரணம்.

 
பன்னீர் செல்வாக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ளது என்பதை மோடியும் அறிவார். ஆனால் தற்போதைய சூழலில் அரசியல் பலம் வாய்ந்தவர்கள் மட்டுமே பிரதமருக்கு தேவை. காரணம் குடியரசு தலைவர் தேர்தல்.
மேலும் தற்போது, மோடியின் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்றார் போல எடப்பாடி வளைந்து கொடுப்பதால் மோடியின் குட் புக்கில் அவரும் இடம் பிடித்துவிட்டார். அதனால் பாஜ தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நம்புகிறது.

 

கடைசியாக, கடந்த மாதம் மோடியின் தூதராக வானதி சீனிவாசன் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மோடியின் எதிர்பார்ப்புகள் மற்றும் முதல்வர் செய்ய வேண்டியவைகள் குறித்து கலந்துரையாடினார்.

 
அதில் எடப்பாடி கூறும்போது, நான் மத்திய அரசுக்கு எல்லா வகையிலும் ஆதரவு தர தயாராக இருக்கிறேன். ஆனா, எனது ஆட்சிக்கு குந்தகம் வர கூடாது என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு வானதி சீனிவாசன், நீங்க மத்திய அரசுக்கு ஆதரவா இருந்தா, உங்களுக்கு பிரதமர் மோடி எல்லா விதத்திலும்ஆதரவா இருப்பாரு என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படியே எடப்பாடியும் மத்திய அரசுக்கு ஆதரவான செயல்பாடுகளில் தொடர்கிறார்.

 
பன்னீரை பாஜ கைகழுவி விட அவரோ எதிர்கால அரசியல், அவரை விட்டு நழுவிவிட்டதாக கவலையில் இருக்கிறார் என்கிறார்கள். போசாம முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று தற்போது கவலைப்படுகிறாராம், பன்னீர்.?

Related Topics: Tamilnadu News