கூட்டுக்குடும்பத்திற்கு மாறும் இளைஞர்கள்! ஒரு சூப்பர் காரணம்!

கிராமங்களில் விவசாயம் பொய்த்து விட்டதால், நகர்புறங்களை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர்.

இதனை நகர்புற நில உடைமையாளர்கள் நன்றாக பயன்படுத்தி, ஏழை, எளிய நகர்புற மக்களின் உழைப்பை சுரண்டுகின்றனர்.

அதிக வாடகை வாங்குகின்றனர். தண்ணீர், மின்சாரம் என எல்லாவற்றிற்கும் தனியாக பில் போட்டு, கஷ்டப்பட்டு வாங்கும் சம்பளத்தில் பாதியை பிடுங்கி விடுகின்றனர்.

மீதியை ஹோட்டல் உரிமையாளர்கள் பிடுங்கி விடுகின்றனர். இருந்தாலும் கிராமங்களில் வேலை இல்லாததால், படித்த இளைஞர்கள் நரகங்களில் (நகரங்களில்) வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கருத்துக் கணிப்பு, இந்திய அளவில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2001 மற்றும் 2011 காலகட்டத்தில் மட்டும் நகர்புறங்களில் 29 சதவீதம் பேரும், கிராமங்களில் 2 சதவீதம் பேரும் கூட்டு குடும்ப முறைக்கு திரும்பியுள்ளனராம்.

இதற்கு காரணம் செலவு மற்றும் பாதுகாப்பு பிரச்சனை தான். ஒரு கணவன், ஒரு மனைவி, ஓரிரு குழந்தைகள் என நகரங்களில் வாழும் நடுத்தர குடும்பத்தினர், அதிக செலவுகளை எதிர்கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், வீட்டில் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாமல் அந்த குழந்தைகள் தவறான திசையில் பயணிக்கத் தொடங்குகின்றன.

கணவன் மட்டும் வேலைக்கு செல்லும் போது, மனைவி வீட்டில் பல மணி நேரம் தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனை சமூக விரோதிகள் பயன்படுத்தி, கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மறுபக்கம் கிராமங்களில் தங்களின் பெற்றோர் கவனிப்பில்லாமல் பரிதவிக்கும் நிலையை கண்டு இளைஞர்கள் மனம் குமுறுகின்றனர்.

இதற்கு தீர்வாக இளைஞர்கள் பலரும் கூட்டு குடும்ப முறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தாய், தந்தை அல்லது அண்ணன் தம்பிகளை தங்களுடன் நகரங்களுக்கு அழைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்று தருகின்றனர்.

இதன்மூலம் பரஸ்பர பாதுகாப்பு கிடைப்பதோடு, செலவும் குறைவதாக, அந்த டைம்ஸ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Related Topics : Online Tamil News