தினகரனுக்கு எதிராக திரும்பியுள்ள இளவரசி குடும்பம்.! சசிகலாவை சந்திக்க சென்றுள்ள தினகரன்.!!

தினகரனுக்கு எதிராக திரும்பியுள்ள இளவரசி குடும்பம்.! சசிகலாவை சந்திக்க சென்றுள்ள தினகரன்.!!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரனை பகிரங்கமாகவே விமர்சித்தார் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா.

இதனால் கிருஷ்ணபிரியா மீதும் இளவரசியின் மகன் விவேக் மீதும் தினகரன் கோபத்தில் இருந்து வருகிறார்.

ஆ.கே நகரில் தினகரன் வெற்றிக்கு உதவிய விவேக் இந்த சம்பவத்துக்கு கிருஷ்ணபிரியா கூறிய கருத்துக்கு எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருந்து வந்தார்.

இதுவும் விவேக் மீதான கோபத்தை தினகரனுக்கு அதிகமாக்கியுள்ளது. இது பற்றி கடந்த முறை தினகரன் சசிகாவிடம் கூறியிருந்தார்.

மேலும் தினகரன் பக்கம் உள்ள கணக்கு வழக்குகள் எல்லாம் தினகரனிடம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக சசிகலாவை சந்திக்க தினகரன் சென்றுள்லார்.

இந்த சந்திப்பின் போது இளவரசியின் குடும்ப பஞ்சாயத்தில் தினகரனுக்கு சார்பாக சசிகலா ஆதரவு அளிப்பார் என தினகரன் ஆதரவாளர்கள்  கூறுகின்றனர்  .

Related  Topics:Top News