அநாகரீகமாக பேசிய ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமான் !!

அநாகரீகமாக பேசிய ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமான்

கவிஞர் வைரமுத்துவைத் தொடர்ந்து கொச்சையாக விமர்சிக்கும்  பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இதனை தெரிவித்த அவர், கவிஞர் வைரமுத்து என்பவர், சமகால தமிழ் இலக்கியத்தின் அடையாளம் என்றும், அவரை இழிவாக பேசுவது என்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் கூறினார்.

தமிழுக்கும், இலக்கியத்துக்கும் திரைப் பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் வைரமுத்து என டுவீட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக், ஆண்டான் விவகாரத்தில், வைரமுத்துவின் விளக்கத்தை ஏற்று கண்ணியம் காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, இயக்குனர் கவுதமன்  தெரிவித்துள்ளார்.