மீண்டும் வெடிக்கிறது விவசாயிகள் போராட்டம்.. பிரதமர் வீடு முற்றுகை..!

பயிர்க்கடன் ரத்து, நதிகள் இணைப்பு, விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

41 நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.

அய்யாகண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 விவசாயிகளைப் போலீசார் கைது செய்து  நாடாளுமன்ற வளாக காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசை கலங்க வைத்துள்ளது.

Related Topics: Top news