போலீஸ் கண்ணுல மண்ணு தூவிட்டு.. சிறையில் பேஸ்புக்கில் லைவ் போட்ட கைதி.!

facebook live video
போலீஸ் கண்ணுல மண்ணு தூவிட்டு.. சிறையில் பேஸ்புக்கில் லைவ் போட்ட கைதி.!

போலீஸ் கண்ணுல மண்ணு தூவிட்டு.. சிறையில் பேஸ்புக்கில் லைவ் போட்ட கைதி.!

பஞ்சாப் மாநிலத்தில் சிறையிலிருந்து கைதி ஒருவர் பேஸ்புக்கில் லைவ்வாக வீடியோ ஒளிபரப்பிய சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் சிறையில் லகா சிதானா என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பெரிய தாதாவாக அந்த ஊரில் செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் 9 நிமிடம் லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார்.

சிறையில் 24 மணி நேரமும் காவலர்கள் இருந்தபோது அவரிடம் எவ்வாறு செல்போன் சென்றது என்று சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Topics:Tamil online news