அமெரிக்காவை சீண்டும் வடகொரியா !

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூலும் அபாயம் இருக்கும் நிலையில், வடகொரியா, அமெரிக்காவை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், வடகொரியா வீசும் குண்டுகள் அமெரிக்க நகரத்தை தாக்குவது போலவும், அதில் அமெரிக்க தேசியக்கொடி எரிந்து சாம்பலாவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் மூத்த தலைவரான இரண்டாம் கிம் ll சாங்கின் 105 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இது குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த, நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், வடகொரியா வீசும் குண்டு அமெரிக்க நகரை தாக்குவது போலவும், அந்த வீடியோவின் முடிவில் அமெரிக்க தேசியகொடி எரிவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Topics – Top News