பூர்ணாவுக்கு மிஷ்கின் கொடுத்த பயிற்சி…அச்சச்சசோ…

பூர்ணா கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் தமிழ் சினிமாவுக்கு எட்டி பார்த்து உள்ளார். அதுவும் மிஷ்கின் எழுதி, அவரது தம்பி ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி மூலம்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி காக்கா முட்டையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தாரோ…அதுபோல பூர்ணா நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் இந்த கேரக்டர் வெயிட்டாம். எப்படி?

மிஷ்கின் ஆபிசில் இருந்து பூர்ணாவுக்கு போன் வந்ததாம். ‘இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, காது கேட்காத கர்ப்பிணி பெண்ணாக நடிக்க முடியுமா?’ என்றவுடன், மிஷ்கின் ஆபிஸ் என்றவுடனே …கதை கூட கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

கிராமத்து கர்ப்பிணி எப்படி நடப்பார்?மை எப்படி வைப்பார்கள்? எப்படி தமிழில் பேசுவார்கள்? என்றெல்லாம் ஆறு நாள் பயிற்சி தந்தார்களாம். முடிந்தவுடன், ஒரு நாள்…பெரிய வயத்தோட காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் நடக்க சொன்னார்களாம். பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்களே தவிர, இவர் நடிகை என்பது தெரியலயாம்.

அப்புறம்…?

 

அப்புறம் என்ன…பயிற்சி முடிஞ்சது.படம் ஆரம்பிச்சது.

Related Topics:Cinema News

 

LEAVE A REPLY