ஜெ.வின் ஆன்மா அவர்களை மன்னிக்காது .!கோபத்தில் சாபம் விட்ட சசிகலா..!! யார் அவர்கள் தெரியுமா..!!

ஜெ.வின் ஆன்மா அவர்களை மன்னிக்காது .!கோபத்தில் சாபம் விட்ட சசிகலா..!! யார் அவர்கள் தெரியுமா..!!

சசிகலா தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

யாரையும் சந்தித்து பேசக்கூடாது, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சசிகலா முதல்வர் எடப்பாடியிடம் பேசவிரும்பியதாகவும் ஆனால் அவர் அதை மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது மைச்சர் ஓ.எஸ்.மணியன் உட்பட மொத்தம் 8 அமைச்சர்களிடம் சசிகலா தொலைப்பேசியில் பேசியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பரோலில் வந்த சசிகலா தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் உறவினர் யாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தினகரன் மற்றும் திவாகரன் மகனிடம் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் பற்றி பேச்சு வந்த போது “ அவர்களை அக்காவின் (ஜெயலலிதா) ஆன்மா என்றைக்கும் மன்னிக்காது என கோபமாக சசிகலா கூறியதாக கூறப்படுகிறது.

அவர்கள் இரண்டு பேரும் அதிகாரம் உள்ளதால் ஆட்டம் போடுகிறார்கள் .எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.

வீட்டில் இருந்த மற்ற நேரத்தில் சசிகலா ஜெ.வுடன் தான் இருந்த பழைய புகைப்படங்களை எடுத்துபார்த்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா நடித்த படங்களை ரசித்து பார்க்கும்போது அவர் கண்ணில் கண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்ததால் ஜெயலலிதா  சமாதிக்கு செல்ல முடியாத வேதனையில் சசிகலா இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Topics:Top News