கல்லூரி மாணவர்கள் கணக்கில் கோடிகணக்கில் டெபாசிட் .!சிக்கியது சசிகலாவின் குடும்பம்..!

கல்லூரி மாணவர்கள் கணக்கில் கோடிகணக்கில் டெபாசிட் .!சிக்கியது சசிகலாவின் குடும்பம்..!!

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

போலி நிறுவனங்கள் மூலம் ஊழல் பணத்தை பதுக்கி பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான ஆதரங்களை சேகரித்த வருமான வரிதுறையினர் கடந்த 9 ம்தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சசிகலா குடும்பம் பல நிறுவனங்களின் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக சேர்த்தது தெரியவந்தது.

மேலும், பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது.

மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் தங்க வைர நகைகள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்கிய ஆவணங்களை மதிப்பிடும் பணிகளில் தற்போது 50 மேற்பட்ட அதிகாரிகள் ஏடுபட்டுள்ளனர்.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மன்னார்குடியில் வசிக்கும் சில கல்லூரி மாணவர்கள் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக திவாகரனிடம் அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர்.

Related Topics:Top New