எப்படி தேர்வு செய்யப்படுகிறார் குடியரசுத் தலைவர்?

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.

எம்.எல்.ஏ-க்கள் அந்தந்த மாநில தலைமை செயலகங்களிலும் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்திலும் வாக்களிப்பர்.

முன் அனுமதி பெற்ற எம்.பி-க்கள் தலைமை செயலகங்களில் வாக்களிக்கலாம்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்தியில் ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் களம் காண்கின்றனர்.

எம்.எல்.ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும் எம்.பி-க்களுக்கு பச்சை நிற வாக்கு சீட்டும் வழங்கப்படுகிறது.

மாலை 5 மணியுடன் தேர்தல் முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Related Topics: Top news