தலைநகர் சென்னையை வெள்ளக்காடாக்கிய பேய் மழை.. ஏரிகளின் நிலை என்ன?

chennai rain status
தலைநகர் சென்னையை வெள்ளக்காடாக்கிய பேய் மழை.. ஏரிகளின் நிலை என்ன?

தலைநகர் சென்னையை வெள்ளக்காடாக்கிய பேய் மழை.. ஏரிகளின் நிலை என்ன?

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல வலுவாக கொட்டித் தீர்த்தது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீரால் மிதக்கிறது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகம், கலங்கரை விளக்கம், டிஜிபி அலுவலகம் போன்ற இடங்களில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை இதுவரைக்கும் பதிவாகியுள்ளது.

மேலும், சென்னையில் இருக்கம் 16 ஏரிகளில் முக்கியமான ஏரிகள் அனைத்தும் பெருமளவில் நிரம்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

செம்பரம்பாக்கம் இன்னும் சில மணி நேரத்தில் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர்தான் சென்னையை மூழ்க வைக்க முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Topics:Chennai online news