கிணற்றை அன்பளிப்பாக வழங்கிய ஓபிஎஸ்..! மகிழ்ச்சியில் லட்சுமிபுர மக்கள்..!

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான லட்சுமிபுரத்தில் அவர் அமைத்துள்ள கிணற்றால் ஊரில் உள்ள மற்ற கிணறுகளில் நீர் மட்டம் குறைந்துவிட்டதாகவும் அதனால் அந்த கிணற்றை மூட வேண்டும் அல்லது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் ஆழமான கிணறு ஒன்றை ஓபிஎஸ் அமைத்திருந்தார். அந்த கிணற்றால் ஊரில் உள்ள மற்ற கிணறுகளில் தண்ணீர் குறைந்துவிட்டது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே அந்த கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த ஊர் மக்கள் ஓபிஎஸ்-ன் தோட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மக்களின் குடிநீர் பிரச்னையை உணர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்குவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் லட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Topics: Tamilnadu news