விவேக் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளதுப்பாக்கி.! வருமான வரிதுறையினர் அதிர்ச்சி..!

விவேக் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளதுப்பாக்கி.! வருமான வரிதுறையினர் அதிர்ச்சி..!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியது.

இதில் சசிகலா உடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் வசமாக சிக்கியுள்ளார்.

இவரின் வீட்டில் கடந்த 9ம் தேதி அதிகாலை தொடங்கிய சோதனை நேற்று மாலை 4 மணியளவில் முடிவிற்கு வந்தது.

இதில் பல ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை வருமான வரிதுறையினர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரானை நடத்தினர்.

இந்நிலையில் இந்த சோதனையில் அவரது வீட்டிலிருந்து 3 துப்பாக்கிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகவும் அதில் ஒன்று உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கி எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

Related Topics:Tamil Nadu News