பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 46 ஆண்டு சிறை தண்டனை! திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி!

child pregnancy
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 46 ஆண்டு சிறை தண்டனை! திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி!

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 46 ஆண்டு சிறை தண்டனை! திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி!

திருச்சியில் பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அடுத்த உள்ள அரசங்குடி மேலவிளாங்குளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமராஜ், 51 இவரது மனைவி பழனியம்மாள், இவர்களுக்கு இரண்டு மகன், 2 மகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பழனியம்மாள் வேலைக்கு சென்றபோது, 3வது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை கண்ட காமராஜ் பெற்ற மகள் என்று பாராமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது தாய் பழனியம்மாளுக்கு தெரியவந்ததும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இதனையடுத்து சிறுமி திண்டுக்கல் கஸ்தூரிபா அனாதை ஆஸ்திரமத்தில் தங்கியிருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்து விட்டது.

அக்குழந்தையின் எழும்பை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த குழந்தை காமராஜ் மூலம் பிறந்தது உறுதியானது.

வழக்கு விசாரணை இறுதி நாளான தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட காமராஜிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தற்கு 1 ஆண்டு, அபராத தொகை கட்டாததால் கூடுதலாக மூன்றரை ஆண்டு என நாற்பத்தி ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Topics:Tamilnadu News