டெல்லி அணிக்கு எதிராக முதலில் களமிறங்கியது ஹைதராபாத்!

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசன் நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத்  அணியில் முகமது நபிக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனும், சிரானுக்கு பதிலாக சிராஜ் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். டெல்லி அணியில் ஜெயந்த யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Topics – Cricket News