கோரத்தாண்டம் ஆடிய கேன் வில்லியம்சன்… டெல்லிக்கு 191 ரன்கள் இலக்கு…

கேன் வில்லியம்சன், தவானின் அதிரடி ஆட்டத்தின் மூலம்  ஹைதராபாத் அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன்  டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – ஷிகர் தவான் கூட்டணி டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்ததால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை  இழந்த ஹைதராபாத் அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் எடுத்தனர்.

Related Topics – Cricket News