நங்கூரமாக நின்ற இலங்கை வீரர்கள்… டிராவில் முடிந்தது மூன்றாவது டெஸ்ட் !!

நங்கூரமாக நின்ற இலங்கை வீரர்கள்… டிராவில் முடிந்தது மூன்றாவது டெஸ்ட் !!

இந்தியா – இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி 373 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்ததாக 163 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை வெற்றியை நோக்கி செல்லாமல், போட்டியை டிராவில் செய்யும் முனைப்பிலேயே களமிறங்கியது போன்று ஆமைவேகத்தில் ரன்களை சேர்த்து நங்கூரமாக நின்றதால் இன்றைய கடைசி நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் மட்டுமே இழந்திருந்ததால் மூன்றாவது போட்டி டிராவில் முடிந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மற்றும் மூன்றாவது போட்டி டிராவில் முடிந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.