பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் !

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  அணியின் ரோஹித் சர்மா  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுவரை மும்பை, பஞ்சாப் அணிகள் மொத்தமாக 18 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் வெற்றி பெற்று சமபலத்தில் உள்ளன.

Related Topics – cricket news