ஒரு போட்டியில தோத்ததுக்கு ஏண்டா ஓவரா பேசுறீங்க.. கடுப்பான பும்ராஹ் !!

ஒரு போட்டியில தோத்ததுக்கு ஏண்டா ஓவரா பேசுறீங்க.. கடுப்பான பும்ராஹ்

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது வழக்கம் தான் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்லை துரத்திய இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான் என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ராஹ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பும்ராஹ்  “ஒரு தோல்வியால் நம்பிக்கை இழந்துவிட்டால், அந்த வீரருக்கு கிரிக்கெட் விளையாடவே தகுதியில்லை என்று அர்த்தம். ஆனால் அணியை ஒரு தோல்வியை வைத்து விமர்சிப்பது சரியான முறையில்லை. பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. முதல் டெஸ்டில் கற்றுக்கொண்ட பாடங்களை திருத்திக்கொண்டு இரண்டாவது டெஸ்டில் நிச்சயமாக சாதிக்க முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.