கிரிக்கெட்டிற்கு குட் பை சொல்கிறார் ஆஷிஸ் நெஹ்ரா !!

கிரிக்கெட்டிற்கு குட் பை சொல்கிறார் ஆஷிஸ் நெஹ்ரா !!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, 38. இவர் இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1999ல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

தற்போது வரை இவர் அசாருதின், கங்குலி, டிராவிட், கும்ளே, தோனி, கோஹ்லி என 6 கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பிடித்த இவர், விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்தியா வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடருடன் ஓய்வு பெற நெஹ்ரா  திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.