காதலியை ஓட்டலுக்கு அழைத்து சென்று வாலிபர் செய்த கொடூர செயல்.! வலியால் கதறிய இளம்பெண்…!!

காதலியை ஓட்டலுக்கு அழைத்து சென்று வாலிபர் செய்த கொடூர செயல்.! வலியால் கதறிய இளம்பெண்…!!

மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் ஒரு இளம் ஜோடி தங்கியிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். சத்தம் கேட்டு ஓட்டலில் இருந்தவர்கள் மாற்று சாவியை கொண்டு அந்த கதவை திறந்தனர்.

அப்போது அந்த வாலிபர் அவர்களை தள்ளி விட்டு தப்பித்து ஓடிவிட்டார். அந்த அறையில் இருந்த இளம் பெண் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.

அவரது உடலில் 5 இடத்தில் பலத்த காயங்கள் இருந்தன் இதனை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த இளம்பெண்னை மீட்டு மருத்துவமனியில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் கல்லூரி மாணவி என்பதும்  கத்தியால் குத்திய வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

அந்த வாலிபருக்கு வேறொரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள கல்லூரி மாணவி மறுத்து இருக்கிறார்.

இதனால் அந்த வாலிபர் இவரை ஓட்டலுக்கு தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

Related Topics:Don’t Miss