இன்று ஆர்.கே. நகர் இறுதி வேட்பாளர் பட்டியல்.! தொப்பி சின்னம் யாருக்கும் என்பது தெரிந்துவிடும்.!!

இன்று ஆர்.கே. நகர் இறுதி வேட்பாளர் பட்டியல்.! தொப்பி சின்னம் யாருக்கும் என்பது தெரிந்துவிடும்.!!

ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ட்சம்பர் 4 ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 131 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இவர்களின் மனுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சரிபார்க்கப்ப்பட்டது. இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த ஜெ.அண்ணன் மகள் தீபா நடிகர் விஷால் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

வேட்புமனுவை வாபஸ் பெற மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளதால், அதற்கு பிறகு ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.

சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் தொப்பி சின்னம் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார்.

தொப்பி சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை கோர்ட் நிராகரித்ததால் தொப்பி சின்னம் கேட்டு 29 பேர் மனு அளித்தள்ளனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவருக்கே தொப்பி சின்னம் வழங்கப்பட உள்ளது.

Related Topics:Chennai News