சசிகலாவை சந்தித்த 50 எம்.எல்.ஏக்கள், 30 எம்.பிக்கள்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி தகவல்.!

சசிகலாவை சந்தித்த 50 எம்.எல்.ஏக்கள், 30 எம்.பிக்கள்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி தகவல்.!

சசிகலாவை சந்தித்த 50 எம்.எல்.ஏக்கள், 30 எம்.பிக்கள்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி தகவல்.!

பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவை 50 எம்.எல்.ஏக்கள் மற்றும் 30 எம்.பிக்கள் சந்தித்து சென்றனர் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் அதிரடி பேட்டியளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தினகரன் இல்லம் முன்பாக தகுதி நீக்கம் செய்த அதிமுக எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சசிகலாவால் பதவியை பெற்று தற்போது அவருக்கே அமைச்சர்கள் துரோகம் செய்து வருகின்றனர்.

பெங்களூர் சிறை நிர்வாகம் கடும் நிபந்தனை என்று எதுவும் விதிக்கவில்லை. தமிழக அரசுதான் அதுபோன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

யாரையும் சந்திக்ககூடாது என்று நிபந்தனையை போட சொன்னதும் தமிழகத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள்தான், அவர்கள் என்ன தடை போட்டாலும் அதனை பற்றி சசிகலா கவலைப்பட மாட்டார்.

இதுவரைக்கும் அதிமுகவை சேர்ந்த 50 எம்.எல்.ஏக்கள், 30 எம்.பிக்கள் சசிகலாவை சந்தித்து சென்றுள்ளனர். உளவுத்துறையால் என்ன செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

Related Topics:Chennai Online tamil news