ஐடி சோதனை நிறைவு.. வருமானவரி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயா டிவி சிஇஓ விவேக்.!

jaya-tv-ceo-vivek going to it-office
ஐடி சோதனை நிறைவு.. வருமானவரி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயா டிவி சிஇஓ விவேக்.!

ஐடி சோதனை நிறைவு.. வருமானவரி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயா டிவி சிஇஓ விவேக்.!

ஜெயா டிவியில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று மாலை நிறைவு பெற்றதால், அந்த நிறுவனத்தின் சிஇஓ விவேக்கை விசாரணைக்காக அதிகாரிகள் கூடவே அழைத்து சென்றுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஜோசியர் என பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் முறைகேடாக பல நிறுவனங்கள் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதே போன்று ஜெயா டிவி சிஇஒ விவேக் வீட்டிலும் சோதனை இன்று மாலை நிறைவு பெற்றது. இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரிப்பதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Related Topics:Chennai News