பகல் நேரத்திலேயே அலுவலகத்தை பூட்டி பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட அதிகாரி.! கையும் களவுமாக பிடித்த ஊர்மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகை வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் ராஜ்குமார் (35), இவரது ஆபீஸ் பம்பப்படையூரில் இருக்கின்றது.

இவருக்கு உதவியாக இளம் பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். மதியம் ஒரு மணி ஆகிவிட்டால் ஆபீஸின் ஜன்னல், கதவுகளை மூடிவிட்டு இருவரும் தினமும் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஊர் மக்கள் சப்கலெக்டர் ராஜ்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் ஆதாரம் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி மீது புகார் அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் நேரம் ஆனதும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உள் பக்கமாக பூட்டி அந்த பெண்ணிடம் மீண்டும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கவனித்த ஊர்மக்கள் அலுவலக கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, பின்னர் வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கும்பகோணம் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அலுவலகத்தை திறந்துள்ளனர்.
அப்போது ராஜ்குமார் மற்றும் அந்த பெண்ணும் பதற்றத்துடனேயே இருந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணையும், வருவாய் ஆய்வாளரும் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை கேள்விப்பட்ட ஊர்மக்கள் அனைவரும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தாசில்தார் ஊர்மக்களிடம் ராஜ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரே ஊர்மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Related Topics:Tamil Online News