பேருந்து இல்லை.. தெரு நாய் பிடிக்கும் வேனில் பயணம் செய்யும் மக்கள்.!

chennai People use dog vans in bus strike
பேருந்து இல்லை.. தெரு நாய் பிடிக்கும் வேனில் பயணம் செய்யும் மக்கள்.!

பேருந்து இல்லை.. தெரு நாய் பிடிக்கும் வேனில் பயணம் செய்யும் மக்கள்.!

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் கடந்த 8 நாட்களாக ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்லும் பொதுமக்கள் மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டியில் பயணம் செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆனால், கோயம்பேடு செல்வதற்கு கூட பேருந்துகள் கிடைக்காத நிலை உள்ளது.

இந்நிலையில், அரும்பாக்கத்தில் இருந்து மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டிகளில் பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று வருகின்றனர்.

இதற்கு அரசு உரிய முறையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Topics:Tamilnadu News