என்னை எல்லோரும் ஏன் அந்த மாதிரி சொல்லுறாங்க..! அதிர்ச்சியடைந்த நாகினி நடிகை..!

இந்தியில் புகழ்பெற்ற டி.வி.சீரியல்,’நாகின்’ . இந்தத் தொடர் தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி ஹிட்டானது.

பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகிறது.

இதில் இச்சாதாரி நாகமாக நடித்திருப்பவர் அடாகான். இந்தத் தொடர் மூலம்.
புகழ்பெற்றுள்ள அடாகான் தன்னை எல்லோரும் ஸ்ரீதேவியுடன் ஒப்பிடுவதாகக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, நாகினி தொடர் என்னை புகழ்சின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. .இந்தத் தொடர் என் கேரியரை மாற்றியதற்கு இந்தத் தொடருக்கு பெரும் பங்கு உண்டு. சேஷா என்ற என் கேரக்டரை ரசித்து நடிக்கிறேன்.

ஸ்ரீதேவி நடித்து 1986-ல் வெளியான இந்திப் படம், நாகினா. இந்தப் படத்தில் ஸ்ரீதேவி பாம்பாக நடித்திருப்பார்.
அதே போல நானும் நடித்திருப்பதாக என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள்.

இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் நான் ஸ்ரீதேவியின் ரசிகை’ என்றார்.

Related Topics : Tamilnadu